மஞ்சள் நிலவே

மஞ்சள் நிலவே
கொஞ்சும் தமிழே
பேசும் போதே தொலைந்தாயே...

கண்ணில் உறக்கமும் இல்லை
உன்னில் இரக்கமும் இல்லை
நீ என் அருகில் இல்லை ....

வார்த்தை மொழியும் மொழிகள்
மௌனம் மொழிந்ததேன் ....

கணம் உன்னை நினைக்கையில்
தினம் கண்ணீர் சிந்துதே கண்கள்..

ஒன்றுமில்லாத என் கைகளில்
பேனா எனும் ஆயுதம் கொடுத்து
கவி எழுத கற்று தந்தாயே ...

கண்ணீர் என்ற வார்த்தை
கவிதை பல மொழியும்
காயம் கண்ட இதயம் மட்டுமே
அதை உணர முடியும் ...

அழகே உன் கோபங்கள் எல்லாம்
மண் மேல் விழுந்த தூரல்கள்
சூரியன் வர காயும் ஈரம் போல
நான் வர காணாமல் போகும் ....

மாலை நேர மரத்தடியில்
உனக்காக காத்திருந்தேன்
நீ வரவில்லை
கவிதை தானாய் வந்ததடி ....

நீ வராமல் முற்று பெறாத
நாட்கள் போல்
வாழ்க்கை எங்கும்
வேண்டுமடி ....

எழுதியவர் : கிரிஜா.தி (4-Nov-16, 10:19 pm)
Tanglish : manchal nilave
பார்வை : 146

மேலே