என்னை விட்டுத் தள்ளிப் போகாதே-இரண்டாம் பகுதி
தள்ளாடி தள்ளாடி போகிறேன் நானும்
உன்னைக் காணாமல்
மனம் தள்ளாடி தள்ளாடி போகிறது
உன்னிடம் பேசாமல்
நீ என்னிடம் பேசாமல்
என்னை விட்டுத் தள்ளிப் போகாதே
கில்லாடி!!
என்னை விட்டுத் தள்ளிப் போகாதே
துள்ளித் துள்ளி நீ ஆடும் அழகைக்
காண வந்தேனே
உன்னோடு ரசிகனாக வந்தேனே
விண்ணோடு ஒன்றிய நட்சத்திரமே!!
உன்னைக் காண ரசிகனாக வந்தேனே!!
கண்ணோடு கண்ணாக நிற்கின்றாயே
எனது கருவிழியில்
பெண்ணாக இல்லை
அழகிய கவிதையாக
என்னோடு ஒரு மொழியில் அல்ல
எல்லா மொழியிலும்
கூறுவேன்
நீ தான் எனது ‘கனவு தேவதை’ என்று
கனவாக மட்டும் வந்து கலைந்து விடாதே
என் நினைவுடன்
என்றும்
என்னை விட்டுத் தள்ளிப் போகாதே