பருத்திவீரன் முத்தழகு

நான் வானம் நீ நிலவு
நான் மரம் நீ தென்றல்
நீ பூ நான் பட்டாம்பூச்சி
நீ கடல் நான் அலை...

நான் தாமரை நீ குளம்
நான் சுரங்கம் நீ தங்கம்
நீ கூந்தல் நான் வாசம்
நீ உறக்கம் நான் காதல் கனவு...

*நான் பருத்திவீரன் நீ முத்தழகு*
நான் இதயம் நீ மூச்சுகாற்று
நீ தீபம் நான் எண்ணெய்
நீ உடல் நான் உணர்வு...

நான் கார்மேகம் நீ குளிர் காற்று
நான் மழை நீ மழைச்சாரல்
நீ பூந்தோட்டம் நான் ரோஜாகூட்டம்
நீ தவம் நான் வரம்...

நான் இயற்கை நீ பசுமை
நான் கன்னம் நீ முத்தம்
நீ பூவாடை நான் மேலாடை
நீ காதல் நான் கவிஞன்
நான் புத்தகம் நீ கண்கள்...

நான் உனக்கு நீ எனக்கு...

எழுதியவர் : செல்வமுத்து.M (5-Nov-16, 11:32 pm)
பார்வை : 326

மேலே