மனிதனும் பிம்பமும்
அன்று கண்ணாடியில்
என்னை நான் பார்த்தேன்
மிக்க மகிழ்ந்தேன்
என் அழகின் பிம்பத்தை
அங்கு கண்டேன்
என் அழகில் நானே
காதல் கொண்டேன்
இன்று கண்ணாடியில்
என்னை பார்த்தேன்
நொந்து போனேன்
அழகின் பிம்பம் இல்லை
காலம் செய்த கோலம்
ஒரு முதியவள் முகம்
சீ, இது நான்தானா ?
என் பிம்பத்தை கேட்டேன்
ஆம் என்றது
கண்ணாடிக்கு அழிவில்லை
அதைக் கண்டுபிடித்த எனக்கு
அதில் கண்ட பிம்பம்
சொல்லியது,அடடா! மானிடா!
' உன் அழகு'
நிலையானது இல்லை '
இதை அறிந்துமா
அகத்தின் அழகில்
உனக்கு இத்தனை
மதி மயக்கம் !