வாழ்வின் பலன்
உப்புக் காற்றும் உருளும் அலைகளும்
உற்சாகமாய் அங்குமிங்கும் ஓடும் சிறார்களும்
அவர்களை தம் கரங்களுக்குள் சிறைப்பிடிக்க
ஓடும் தாய்மார்களும் அலங்காரம் செய்ய
மதி மயக்கும் மாலை நேரம்
கடற்கரை சாலை வழியே
என்னை இறுக்கியணைத்து
முதுகில் சாய்ந்தபடி
என்னவள் முனங்கும் குரலுக்கு,
முகத்தில் புன்னகை பரவ ...
ஆண் பெண் பாரபட்சமின்றி
அனைவரையும் அரவனைத்துச் செல்லும்
சமுத்திரத்தின் சல்லாபத்தை ரசித்த படி...
இரு சக்கர வாகனத்தில்
நீண்டதூர பயணம் ...
எனக்கென்றே பிறந்தவள்
என் எண்ணங்களை
ஒட்டுமொத்த குத்தகைக்கு
எடுத்துக் கொண்டவள்
என் கருப்பு தேவதை
அவளின் கண் சிமிட்டலில்,
கரைந்து போனவன்தான் நான்...
தொலைந்து போன
ஒட்டு மொத்த சந்தோஷத்தையும்
மீண்டும் பெற நினைக்கின்றேன்
முப்பொழுதும்...
அவள் முகம் காண துடிக்கிறேன்
அவளின் ஒற்றைச் சிரிப்பிற்கு
உசுரையும் கொடுப்பேன் விலையாக
விலை என்னவோ குறைவுதான்
அவள் மீதான அன்பு வலியது
அவள் என்னோடிருந்த நேரம்
சந்தோஷ எல்லையை
சந்தடிச் சாக்கில் தொட்ட காலம்
காற்றில் கலையும் கூந்தலாய்
அவள் ஆடை களைய
நான் ரசிப்பதெப்போது...?
இச்சையால் அல்ல !
என் இஷ்ட தேவதையின்
அதிகபட்ச அன்பை அருந்துவதற்காக...
அந்த ஆனந்த கடலில் நீந்த - என்
அம்மணியின் அனுமதி கிடைக்கும் தருணம்
என் வாழ்வின் பலன் முழுமை அடையும் ...!!!

