காதல் வலி 02
நீ பாலைவனச்
சோலை மணலாய்
நான் அங்கே தண்ணீா்
தேடி அழையும் ஆளாய்
கானல் நீராகிப் போனது
உன் வருகையடி
காண கிட்ட வந்தால்
நீ போராய் தூரமடி
தூரயிருந்து பாா்த்தே
கழியுது என் காலமடி
இவ்விளையாட்டை
விரைவில் முடித்து வையடி
பெண்ணே நீ என்னை
கொஞ்சம் ஊடுருவி பாரடி
நான் முழுக்க முழுக்க
நீ வசிக்க ஏற்ற இடமடி