சண்டே

இன்று மட்டும் ஏனோ கோழி பத்து மணிக்கு தான் கூவுகிறது, பின்ன இருக்காதா வாரம் முழுக்க அஞ்சு மணிக்கு கூவி அதுக்கும் டயர்ட் இருக்குமல்ல ஐ சப்போர்ட் கோழிங்க ... ஆனா என்ன தான் சொல்லுங்க ஞாயிறு மட்டும் விடியறதும் கோழியால தான் முடியறதும் கோழியால தான் ,
நம்மள எழுப்பி எழுப்பி அடுப்பறையில ஒரு ஜீவன் டயர்ட் ஆகிருக்கும் சரி பாவம்னு கண்ண துடைச்சிட்டே எழுந்து வருவோம் "பொம்பள பிள்ள வெயில் வர்ற வரைக்குமா தூங்குறது ஏத்தே பிள்ளைய நல்லா வளத்திருக்க போ" இத சொல்றது வேற யாரா இருக்க போறாங்க வீட்டுத் திண்ணையில உட்காந்திருக்க கிழவி தான் சரி காலையிலே டென்சன் ஆனா காபி தர மாட்டுங்கற பயத்துல பேசாம போய்டுவோம் , சண்டே ஆபிஸ் மட்டும் லீவு விடுறாங்க பிரஷ் பன்றதுக்கெல்லாம் லீவு இல்லையானு கொடி தூக்க தோனும்
அம்மா கைல தோசை கரண்டி வேற இருக்குமா அதான் பயந்து பயந்து வரும் .... சரி அப்டி இப்டி நடிச்சு கைல காப்பி வாங்கியாச்சு இந்த ரிமோட் நம்ம கைக்கு வர்றதுக்குள்ள இருக்கு காவிரி தண்ணி கூட கிடைச்சிரும் போல , நேத்து போட்ட நியூஸ் தான் திருப்பி திருப்பி போடுறாங்க அத எப்டி தான் மொத தபா பாக்குற மாதிரியே பாக்குறாரோ எங்க அப்பா தெர்ல , எப்டியும் ரிமோட் கிடைக்க போறதில்ல இந்த நியூஸ் பேப்பராவது கிடைக்குமா நியூஸ் படிக்க இல்ல சண்டே அழகுக்குறிப்பு வந்திருக்கும் அத பாக்க தான் இன்னும் ஸ்போர்ட்ஸ் காலம் பாக்கி இருக்கு படிச்சிட்டு தரேன் அண்ணா பேப்பருக்கும் கேட்ட போடுவான்
அப்டி இப்டி காலை டிப்பன தோசையோட சிறப்பா முடிச்சிட்டு ரிமோட் கிடைச்ச சந்தோசத்துல சேனல் மாத்தினா அங்க அரச்ச மாவையே அரச்சிட்டு இருப்பாங்க ஒரு பக்கம் நடிகர் மேடைல அழுவார் இன்னொரு பக்கம் புது படங்கற பேர்ல பயங்கர பழைய படத்த போடுவாங்க , சரி இந்த எப்பி, வாட்ஸ் அப் போலாம்னு போனா அங்க அவங்க சாப்பிங்ற பேர்ல எதாவது வாங்க போய் பொருளா வாங்காம செல்பிய எடுத்துப் போட்டு உசிர வாங்குவாங்க , சரி என்னடா மணி ரெண்டு தான் ஆச்சு அதுக்குள்ள வயிறு காலிங் பெல் அடிக்குதேன்னு பாத்தா சிக்கன் கிரேவி வாசம் சமையல் கட்டுக்குள்ள இருந்து வரும் , சமைச்ச கைக்கு தங்கம் வாங்கி போடலாம் தோனும் பசில உளர்றோம் சொல்லி நம்மள நாமளே தேத்திக்கனும், அப்டி இப்டி மூணு மணிக்குள்ள லஞ்ச் முடிச்சிட்டு அஞ்சு மணி வரை ஆழ்ந்த உரக்கத்திற்கு போவோம் பாருங்க சொர்க்கம் சார் ,
ஆறு மணிக்கு மேல நாம ப்ரஸ் ஆகிட்டு தெருவுல அப்டியே வேடிக்கை பாப்போம் அப்போ தான் எதிர்வூட்டு ஆண்டி வந்து இன்னைக்கு லீவா பாக்கவே முடியலைங்கும் அங்க தான் நாம வேலைக்கு போற கெத்த காமிக்க முடியும் பயங்கர வொர்க் அப்டி இப்டினு சொல்டு தெருவுல அப்டியே கொஞ்சம் சைட் அடிச்சிட்டு ஆமா பொன்னுக சைட் அடிக்க கூடாதா என்ன ?? எட்டு மணிக்கு வீட்டுக்குள்ள ஆஐர் ஆவோம் நீயா??நானா?? பொறுமையா பாத்துட்டு அதே சிக்கன் கிரேவி வித் தோசையோட டின்னர் முடிச்சிட்டு தூங்க போகும் போது அய்யோ நாளைக்கு திங்களே ஆபிஸ் போகனுமேன்னு ஸ்க்கூல் குழந்த மாதிரி பீல் பண்ண தோனுமே அதுல முடியுது சார் இந்த ஞாயிறு ...

எழுதியவர் : க.நாகராணி (6-Nov-16, 11:01 pm)
சேர்த்தது : நாகராணி
Tanglish : sunday
பார்வை : 303

மேலே