உன்னழகை நீயறியாது பருகுகிறேன்

நாணமெனும் ஆடை பூண்டு
நங்கையென பிறந்தவளோ​...அவளும்
வாசமுள்ள நந்தவனத்தில்
வளர்ந்திட்ட மலர்க்கொடியோ ....
தீண்டிடும் தென்றலை சுமந்துவந்து
சுகமுடனே தழுவிடும் சுந்தரியோ ....

கன்னியவள் கனவில் வந்தவளே
எண்ணியதும் வந்தாயே என்னெதிரில் ...
ஏக்கத்தை எரித்திடு எனை அணைத்து
தூக்கத்தைத் துறந்துக் காத்துள்ளேன் ...
ஏய்த்திடாதே இனிநீயும் தாங்காது
என்னிதயம் கன்னிவெடியில் சிதறிடும் ...

நினைத்தாலே உனைநான் உருகுகிறேன்
உன்னழகை நீயறியாது பருகுகிறேன் ...
நடிக்காதே நீயும்இனி தள்ளிநின்றே
துடித்திடும் என்மனம் வெடித்திடுமே ...
வீழ்ந்திட்டேன் உந்தன் விழியம்பால்
எழுந்திடுவேன் நீயும் தழுவிட்டால் ...

வாழ்ந்திடுவோம் நீயும் சம்மதித்தால்
வான்வெளியை சுற்றி வந்திடுவோம் ...
இல்லறத்தின் இலக்கணம் கற்றறிவோம்
இன்பத்தின் எல்லையைக் கண்டிடுவோம் ..
நாணத்தின் ஆடையை அணிந்தவளே
நானிலத்தின் அழகிகளில் முதலானவளே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Nov-16, 9:49 pm)
பார்வை : 255

மேலே