காதல சொல்ல கவிதை ஒன்று வேண்டும்

உங்கள் நண்பன் பிரகாஷின்
80ம் படைப்பு.....

பூவ தலையில் வச்சிட்டா
அவ மல்லிகைக்கு இராணியாட.....

அவள் தலைகூந்தலில் தான்
அந்த கருமேகமும் சாயுமடா....

இரவினில் வெளியே வந்திட்டா
நட்சத்திரமும் கண் சிமிட்டுமடா....

அவ அழக பார்த்த பின்பு தான்
அந்த நிலாவும் மறையுமடா.......

அவ கண்ணுல கோபம்
வந்துட்டா.....
அந்த சூரியனும் எரியுமடா.....

அவ மனசு கொஞ்சம்
குளிர்ந்திட்டா......
இங்க மழையும் பொழியுமடா.....

அவள் கன்னம் கொஞ்சம்
சிவந்திட்டா....
அந்த செவ்வானம் தொலையுமடா.....

அவள் அணியும் ஆடைக்கு
தான்...
இந்த வானவில்லும் இறங்குமடா...

முகத்தில் பூசும் மஞ்சளுக்கு
மனசும் மடியுமடா.....

பார்த்த நெஞ்சினில் என்றும்
புது காதல் விளையுமடா.....

அவ அழக வர்ணிச்சி
என் காதல சொல்ல
கவியும் இல்லையடா....

தினமும் கனவில தான்
இங்க ரொம்ப தொல்லையடா.....

நித்தமும் அவள் நினைப்பு
என் இதயமாய் துடிக்குதடா....

மொத்தமாய் என் வாழ்வும்
இனி அவளுக்காக வாழுதடா......

எழுதியவர் : பிரகாஷ்.வ (8-Nov-16, 8:23 pm)
பார்வை : 258

மேலே