என்னவன்
வலகரம் பற்றி வாக்களித்தான்..
வானவில் வண்ணங்களை வாழ்வில் சேர்ப்பேன் என்று...
கண்ணில் கருமை சேர்த்தான் காா்முகிலை கொண்டு...
உதட்டில் நிறம் சோ்த்தான் உதிரத்தை கொண்டு....
மின்னலை கொண்டு நிலவை இரண்டாய் நறுக்கி ஒளியேற்றினான் கன்னங்களை...
முதல் மழை துளியை முத்தாக்கி
மூன்றாம் பிறையில் முக்கி எடுத்து
மூக்குத்தியாய் பதித்தான்...
பகலவன் கதிர்களில் பனிதுளியை பாா்த்து பாா்த்து கோர்த்து மணிமாலையாய் அணிவித்தான்...
விண்மீனை வில்தோடுத்து வீழ்த்தி
காதோடு தோடு செய்தான்...
நாகமணி ஒளியை நடுவிரலில் தடவி
பொட்டாகினான்....
நதியின் சலசலப்பு தென்றலின் விசுவிசுப்பு ஆழ்ந்தகடலின் அலையோசை,ஆழி முத்து எல்லாம் என் சலங்கையாகினான்...
வட்டவானவில் வளையிலானது...
அனைத்தும் செய்தவன் மலரை மட்டும் சூட மறுத்தான்...காலம் வரை வாடமல் சிாிப்பு இருக்க வாடும் பூ எதற்க்கு என்றான்....
என்னவன்... என் கணவன் என்று செல்லி கொள்வதே கா்வம் தான்...