அன்பென்ற மழையிலே...

காதலைப் பற்றி எழுத
காதலைப் பற்ற வேண்டுமா?
கனவினிலே காதலிக்கும்
கற்பனையே போதாதோ?

தூரத்தில் நீ வந்தாலும்
துள்ளிக் குதிக்கும் என் இதயம்
படபடவென அடிக்கும் இமைகள்
தூக்கம் இல்லாமல் சிரிக்கும் இதழ்கள்

ஆசையோடு கோர்க்கத் துடிக்கும் கைகள்
தலை கோதிவிட ஏங்கும் விரல்கள்
அன்பைச் சொல்லும் பார்வைகள்
தோள் சாய சரியும் தலைகள்

என்னில் உன்னை நான் தேட
உன்னில் என்னை நீ தேட
அன்பிலே நாம் கரைவதற்கு
அடிக்கல் தான் நாட்ட வேண்டுமா?

நாம் என்ற வார்த்தை பிரிந்தால்
நரகம் தான் என்றாகும் இனி...
தோள் சேர்ந்து விட்டாலே
தோல்வி இல்லை எந்நாளும்

பிரிவென்பது நமக்கில்லை
சேர்ந்திருக்கும் சொர்க்கம் தேடுவோம்
காதலிலே காத்திருப்போம்
காவலனாய் நீ இருப்பாய்...

கண்ணெடுத்தும் பார்க்காமல்
என் மனதினிலே வரைந்து விட்டேன்...
காலமெல்லாம் என்னோடு நீ
இணையாகவே வர வேண்டும்...

அக்கறை கொஞ்சம் காட்டி விட்டால்
ஏக்கம் எல்லாம் தான் தீரும்
என்னோடு நீ இருந்தால்
எத்தனை ஜென்மமும் நான் எடுப்பேன்...

கண்ணாலே காண்பதற்கே
இத்தனை நாள் போனதென்ன?
காணும் நாள் எந்நாளோ
என் கண்ணும் ஏங்குதைய்யா...

தேவை என்று ஒன்றில்லை
ஆசை என்றும் எதிலுமில்லை
உன் அன்பில் நான் இருந்தால்
என் வாழ்வும் பூர்த்தியாகும்...

நானிலத்தில் உன்னைத் தேட
நானறியேன் நானறியேன்
என்றாலும் உன்னைக் காணும்
நாள் ஒன்றும் வரும் தானே...

அதுவரையில் காத்திருப்பேன்
உன் அன்பிற்கு ஏங்கி நிற்பேன்...
அள்ள அள்ளக் குறையாத
அன்பையும் நான் தருவேன்...

என்னோடு நீ இருக்கும்
ஒவ்வொரு துளி நேரமும்
என் மனதை நிறைத்திருக்கும்
உன் மனதை வருடி இருக்கும்....

தாங்கித் தடுக்கி உனக்காக
எந்நாளும் தந்திடுவேன் எல்லாமே
எனக்கென்று ஒன்றில்லை
நீ சொல்ல நான் செய்வேன்...

உன்னிலே கரைந்துவிட்டாலே
போதும் நான் கரை சேர்வேன்...
என்னிலே நீ வேண்டும் எல்லாமும்
கேட்காமலேயே நான் தருவேன்...

சந்தோஷ சிரிப்பைத் தவிர உன்னை
வேறெதுவும் அண்ட விட மாட்டேன்
உனக்காக நான் ஓடும் ஓட்டத்தை நீ
ரசித்திருந்து இறுமாந்திருப்பாய்...

இப்படியும் ஒரு லூசு
எனக்கென்று வாய்த்ததே என்று
ஓயாமல் என்னைப் புகழ்ந்து
நீயும் என்மேல் லூசாவாய்...






எழுதியவர் : shruthi (3-Jul-11, 4:57 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 455

மேலே