நகைச்சுவை- ஓட்டுப்போட்டு என்ன பயன் -இருவர் உரையாடல் -சிந்திக்க, சிரிக்க

இரு நண்பர்கள் உரையாடல் , ஒருவர் கவிஞர்
மற்றோருவர் தொழிலாளி .

தொழிலாளி : கவிஞரே நாம் இந்த நாட்டிலே
இம்புட்டு வருடங்கள் ஒட்டு போட்டு
என்னத்த கண்டோம் ................இம்ம்
நண்பா , ஒரு கவிதை வடிவில்
இதய சொல்லமுடியுமா ?

கவிஞர் : அதற்கென்ன, என் இனிய நண்பரே
இதோ தருகிறேன்

" ஓட்டு போட்டு
ஓட்டு போட்டு
என்னத்த கண்டோம்
இந்த நாட்டிலே
ஓட்ட வீடும் போச்சு
ஓட்டாண்டி ஆன பின்னே
ஓட்டு போட்ட சட்டை தான் மிச்சம்

ஓட்டு வாங்கினவனோ
ஓட்டு வீட்டிலிருந்து
மாடி வீடு வாங்கி
இன்று அடுக்கு
மாடிகள் என்று
சொத்து குவித்து
எங்கோ போய்விட்டான்
ஓட்டு கொடுத்தோம்
ஓட்டகினோம் கால் இழந்தோம்!"
போதுமா நண்பா

தொழிலாளி : நல்லதோர் விளக்கம்
நாள தொழிலார் கூட்டத்தில்
இதை படிக்கட்டுமா நண்பா

கவிஞர் ; கண்டிப்பா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Nov-16, 9:06 am)
பார்வை : 70

மேலே