கொஞ்சி விளையாடத் தூண்டுதே! 

கொஞ்சி விளையாடத் தூண்டுதே! 
*****************************************

ஆர் உயிரே உன் பார்வை 
ஆ ஆ ஏற்றுதே போதை 
கண்ணில் கருமேகமோ 
கண்டு இமை ஆடுமோ 

கண்ணிலே உயிர்க் கவிதை 
உன்னிலே என்னை இழுக்குதே 
கன்னல் மொழி பேசுதே 
மின்னல் என்னைத் தழுவுதே 

அன்ன நடை கண்டு மனம் 
சின்ன இடை தேடுதே 
சன்ன ஆடை காற்று தழுவ 
மின்னல் மேடை துலங்குதே 

சின்னஞ் சிறிய செவ்விதழ் 
சிருங்காரப் புன்னகை சிந்துதே 
சிந்தை மகிழும் வண்ணமே 
சிரிக்கும் பன்னீர்ப் புஷ்பமே 

மாலை வெயில் மாமன் 
மனதில் மயக்கத்தை ஏற்றுதே 
உன் பனி மலர்ப் பார்வையில் 
என்னுள் புது மலர் பூக்குதே 

மன்மதன் வருகையை மயிலே 
உன்தன் புன்னகை கூறுதே 
மலர் அம்புகள் ராகம் பாடி 
மனசில் ஆசையைக் கூட்டுதே 

மஞ்சள் பூசி மின்னும் கன்னம் 
மஞ்சம் நோக்கி அழைக்குதே 
நெஞ்சில் அலை பாயும் ஆசை 
கொஞ்சி விளையாடத் தூண்டுதே! 

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (9-Nov-16, 7:36 am)
பார்வை : 83

மேலே