விடியல் தரும் வியர்வை

விடியல் தருமாம்
வியர்வை - "பொய்
கூற்றென விளக்கம்
தரும் விடைக்
கூற்றாய் - " உழவன்"

வானம் பார்த்து
தாபம் கொண்டு -
தேகம் வியர்த்தே
தாகம் கேட்கும்
"வியர்வை"..

நத்தை கூட்டிலே
அட்டைப்புழுவாய்
ஊழல் நாட்டிலே
உணவுக்கு விடியல்
தேடும்
இவன் "வியர்வை" ..

அவன் பெற்றெடுத்த
பிள்ளைக்கு
தத்தெடுத்தோர்
பெயர் வைக்க
விடியல் தொடுமோ
இவன் "வியர்வை" ..

தழைத்த மரத்தில்
பழுத்த கனியோடு
உறவாடும்
காற்றைப்போல தான்
இவனது வியர்வை ...

மண்ணில் விழுவது
நிஜமே ..,- விடியல்
வேண்டி மீண்டும்
ஒரு நாள் மரமாகவே..!

எழுதியவர் : தாமு (11-Nov-16, 6:49 pm)
பார்வை : 126

மேலே