வறண்ட மண் வாராத மழை

நீ வாராமல் போனால்
நின் அகம் மறப்பவன் நானல்ல.
நீ வராத வேளையிலும் உன்
நிழல் போல காத்திருப்பவன்.

நீ செல்லும் இடமெல்லாம்
நிதம் தேடி அலைபவன் நானல்ல.
நீ வரும் சில நேரங்களில் என்
நிலத்தை வளமாக்கப் பார்த்திருப்பவன்.

யாரும் சுற்ற விரும்பாத
சுடு மண்ணாய் நான்.
சற்று நனைத்துவிட்டுத்தான்
போயேன் உன் வரவுகளால்.

என்றோ என்னுள் விதைக்கப்பட்ட
எண்ணற்ற விதைகளை நீ
என்மேல் கொட்டித் தீர்ந்து
எட்டிப் பார்க்க வைத்துவிடு.

பொழிவாய் என்ற நம்பிக்கையில்
பொறுமையாய் நான்.
இப்படிக்கு மண்.

மண்ணாய் அவன்.
மழையாய் அவள்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (11-Nov-16, 7:08 pm)
பார்வை : 109

மேலே