ஹைக்கூ கவிதைகள்

உப்பு கரிக்கும் பெருநீர்
ஆர்க்கும் பேர் அலைகள்
உயிரினங்களுக்கு ஜீவாதாரம் .....................(கடல்)



ஆடிவந்து தொட்டே அணைக்கும்
சுழன்று தூள் கிளப்பும்
நாசங்கள் பல விளைவிக்கும் ........................(தென்றலும்,புயலும்)

மலையில் உதித்து பின்
மண்ணில் நடைபோடும் நங்கை
நம்மை வாழவைப்பாள் பெரிதே ...................( நதி)

கற்களை உறைக்க பொறியாய் தெறிக்கும்
பெரும் தீயாய் பரவும்
ஆயின் வாழ்வுக்கு இன்றியமையாதது ....................(நெருப்பு)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-16, 2:55 am)
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 75

மேலே