நகைச்சுவை- தம்பிதுரை-பால்ராஜ் உரையாடல் -டாஸ்மாக் முன்னால-
ஒரு டாஸ்மாக் கடை வாசலில் நண்பர்
இருவர் உரையாடல்
--------------------------------------------------------------
பால்ராஜ் : ஏன்னா தம்பிதுரை , இந்த பக்கமே
ஒரு வாரமா அல்ல காணோம் ?
எங்கேயாவது வெளியூர் போயிடு வரங்களா
என்ன ?
தம்பிதுரை : அதெல்லாம் ஒன்னும் இல்ல பால்ராஜ் அண்ணே
ஐநூறு ,ஆயிரம் நோட்டு செல்லதுனு வந்த
முதல் நாள் தான் எல்லாம் ஐநூறு தாளா
இருக்கட்டுமே னு மேஸ்திரி கிட்ட சொல்லி
சம்பளம் வாங்கினேன் - மாத முடியாம போய்
திக்கு முக்காடிப்போய் , கடைசில கைல
கடச்ச சில்லறைகளா உண்டில வைத்ததை
கொண்டாந்திருக்கேன் -௨௫ பைசா, ௫௦ பைசா,
ஒரு ரூபா, ரெண்டு ரூபா காலின்ஸ்''''''''
மொத்தம் எவ்வளுவுனு எண்ணக்கூட இல்ல
ஆனா அரசாங்கம் இந்த காய்ன்ஸ் இன்னும்
செல்ல வெச்சுருக்கு இல்ல ! அப்புறம் என்ன
இதை குடுத்து செருக்கு வாங்க வேண்டியதுதான் !
பால்ராஜ் : நல்லதா போச்சு அண்ணே , வாங்க போவோம்
எவன் இந்த சில்லறை குடுத்தா, செருக்கு தரமாட்டேனு
சொல்லுவான் பார்ப்போம் !
தம்பிதுரை : அம்மான், நான் தானே வாங்கப்போறேன் என் செலவில்
கூட நீ என்ன வாங்க போலாம்னுட்டு !
பால்ராஜ் : அண்ணே என் கிட்ட இந்த உதவாக்கரை
ஐநூறு நோட்டு ஒன்னு தான் இருக்கு .....
குடிச்சி மூணு நாள் ஆச்சு .................
அதான்.............. நீ ................ உதவிபண்ணுவன்னு....
ஹீ......ஹீ.....ஹீ... (தலை சொரிதல்)
தம்பிதுரை சரி வா போவோம் ............சரக்கு வாங்கிட்டு
வருவோம் சில்லறை கொடுத்து !
சிறு சில்லரையும் கைக்கு உதவும்
இல்லையா......
பால்ராஜ் : ஆமாம், ஆமாம் அண்ணே !ஹீ .................ஹீ......