நான் - ஆண்
செத்தவர்களை
தோண்டி தோண்டி
அழுகிறேன்
அதே சாலையில்
அதே பழைய வண்டியை
சற்றும் மாறாத காட்சியுடன்
அரங்கேற்றுகிறேன்
ஆயிரம் பேர் எழுதிக்
குவித்த காகிதத்தை
பொறுக்கி எடுத்து
புதுக் கவிதை செய்கிறேன்
எல்லா சட்டியிலும்
குதிரையோட்டி அதே
அதே வட்டத்தை நிரப்புகிறேன்
திரும்ப திரும்ப
புளித்தாலும் அசராமல்
புதிதென்கிறேன்
எதற்கெடுத்தாலும்
முன் சொன்ன பல்லவியையே
பாட்டாக்குகிறேன்
நீங்கள் அரங்கம் அதிர
எழுந்து கை தட்டுகிறீர்கள்
முகப்புத்தகத்தில் ஆயிரம்
தாண்டுகிறது லைக்ஸ்
பின்னூட்டத்தில் வரிகள்
செய்து பரவசநிலையில்
புணருகிறீர்கள்
எடுத்த முடிவை மாற்றிவிட்டு
மீண்டும் பெண் பெயரிலேயே
எழுதத் தொடங்குகிறேன்
நான் - ஆண்
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
