நாளையாவது விடியுமா...?

தம் பசி மறந்து
தம் உறவுகளின் பசியை மதிக்கும் இவர்களோ...
உழைப்பதையே பசியாக கொண்டு வாழ்கின்றார்கள் அந்நிய நாட்டில்...!

வெயில் மழை பாராது
தினந்தோறும் உழைக்கின்றார்கள் ஓய்வில்லாதவர்களாய்...!

திருப்தியற்ற தூக்கம்
இருந்தும் பொருட்படுத்தவில்லை
வாழ்க்கையோ நிறைந்தது சோகங்களால்...!

நாளையாவது விடியுமா
இவர்கள் வாழ்வு....?

எழுதியவர் : சி.பிருந்தா (16-Nov-16, 4:33 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 136

மேலே