எழுதுகோல்

வாழ்க்கை என்னும்
விளிம்பில் கன்னி அவள்
என்னை விட்டு
சென்றபோது வந்த என்
கண்ணீர் துளியும்
காய்ந்துபோனது!
ஆனால்
என் கவலைகளை
எழுத தொடங்கிய
என் எழுதுகோலின்
"மை"யானது காயவில்லை!!
என் வாழ்வில் "மை" தீட்டிய
மங்கை அவள்
விட்டுச் சென்ற உயிரானது
இன்று
என் எழுதுகோலின்
முனையில் உள்ள "மை"யில்
வாழ்ந்து வருகின்றது!!!!!!!!!!