வேண்டுதல்
ஏதோ ஒன்றிற்காக வரிசையில் நின்றிருந்தாள்.
அவளைப் பார்க்கும் வண்ணம் சற்றே
தொலைவில் அமர்ந்திருந்தேன் நான்.
அவள் தெய்வத்திடம் வேண்டியிருப்பாள்
இந்த வரிசை விரைவாக செல்ல வேண்டுமென்று.
நானும் வேண்டியிருந்தேன் அந்த வரிசை
மெதுவாகச் செல்ல வேண்டுமென்று.
பாவம் அந்த தெய்வம்தான் என்ன செய்யும்?