என் காதலி

என் காதலி,
இந்த பிரபஞ்சத்திலேயே
மிகவும்
அழகானவள்

அவளைப் பிடிக்காதவர்களே
இல்லை
என்று
நிச்சயமாக கூறலாம்

என்னுடைய காதல்
தெரிந்தப்
பின்பும்
யாரும் எதிர்க்கவில்லை

எப்பொழுது என்னை
பார்க்க வந்தாலும்
முத்தமிட
மறக்கமாட்டாள்

என் முன்னால்
காதலிக்கு
அவளைக்
ரொம்பவே பிடிக்கும்

என் மனைவிகூட
பொறாமைக் கொள்வதில்லை,
அவளுடன் நான்
கொஞ்சி விளையாடும் போது

என் நினைவு தெரிந்த
நாளிலிருந்தே
அவளை
எனக்கு தெரியும்

இந்த உலகத்தில்
நான்
உள்ளவரை
அவளைக் காதலிப்பேன்

நான் பிறக்கும்
முன்பிருந்தே
அவள்
இருக்கிறாள்

நான் இறந்த
பின்பும்
அவள்
இருப்பாள்

இன்னுமா தெரியவில்லை
அவளின்
பெயர்
“மழை”

எழுதியவர் : ஜெஸ்வின் (19-Nov-16, 6:42 pm)
Tanglish : en kathali
பார்வை : 125

மேலே