500க்கு 1,000

என்னடா கண்ணு ஐநூறுக்கு ஆயிரம்னு சொல்லிட்டு இருக்கற? அந்தக் காலத்தில பதினோராம் வகுப்பைத் தேர்ச்சி பெறறதே ரொம்பக் கடினம். உந் தாத்தா 50% மதிப்பெண் தான் வாங்கித்தான் தேர்ச்சி பெற்றாரு. ஆங்கிலத்திலயும் தப்பு இல்லாம அழகாப் பேசுவாரு எழுதுவாரு. இந்தக் காலத்தில ஒவ்வொரு பள்ளிலயும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில பத்து பேராவது ஐநூறுக்கு ஐநூறு வாங்கறாங்க. நீயும் ஐநூறுக்கு ஐநூறும் 1,200க்கு 1,200ம் வாங்கினவந்தாண்டா வம்புக்கார வடிவேல் கண்ணு. மோதல்ல தமிழ்ல தப்பு இல்லாம செல்லாத ஐநூறு ஆயிரத்தப்பபத்தி ஒரு கட்டுரை எழுதுடா பாக்கலாம்.
@@@@@
பாட்டிம்மா நா ஐநூறுக்கு ஆயிரம்னு சொன்னதும் செல்லாத ஐநூறு ஆயிரத்தப்பத்தித்தான்.
ஃஃஃஃஃஃ
கட்டுரை எழுதச் சொன்னா தப்பிக்கப் பாக்கறயாட வம்பா வடிவா?
@@@@@
மொதல்ல 500க்கு 1,000த்தப்பத்தி சொல்லிட்டு கட்டுரைக்கு வர்றேன்.
நம்ம வீட்ல இருக்கறது ரண்டு ஐநூறு ரூபாய் தாள். அத வங்கில தந்தா நமக்கு ஆயிரம் ரூபாய்த் தாளத் தரமாட்டங்க. ஏன்னா 1,000தாளு செல்லாது.
@@@@
அய்யய்யோயோ அப்பறம் என்னடா செய்யறது?
ஃஃஃஃ
கவலப்படாதீங்க பாட்டிம்மா. நாம ரண்டு ஐநூறையுங் குடுத்தா 10 நூறு ரூபாய்த் தாள்கலத் தருவாங்க. அதத்தான் நா ஐநூறுக்கு ஆயிரம்னு சொன்னேன்.
@@@@@
டேய் வம்புக்காரப் பயலே நீ கட்டுரை எழுதாம இருக்க என்ன ஏமாத்தறது தெரியும்டா.
ஃஃஃஃஃ
பாட்டிம்மா பள்ளிலே மனப்பாடம் பண்ணற கலையத்தாஞ் சொல்லிக் குடுத்தாங்க. கையெழுத்து அழகா இருந்து குருட்டுத்தனமா மனப்பாடஞ் செய்ததை தப்பு இல்லாம புத்தகத்தில இருக்கற மாதிரி எழுதினா 500க்கு 500, 1,200க்கு 1,200ஐ ஆசிரியர்கள் அள்ளி வீசுவாங்க. என்னால சொந்தமா பிழையில்லாம ஒரு பக்கங்கூட எழுத முடியாது பாட்டிம்மா.
ஃஃஃஃஃ
ஏண்டா அந்தக் காலத்தில மூணாம் வகுப்புப் படிச்சவங்களே தமிழ்ல தப்பு இல்லாம எழுதுவாங்க. நீ பிடொக்கு பட்டம் வாங்கினவன். ஏண்டா வேலைக்குப் போகம வீட்லயெ கெடக்கற.
ஃஃஃஃஃஃ
பாட்டிம்மா எல்லாம் அந்த மனப்பாடத்தாலே வந்த வினை. எந்த வேலையா இருந்தாலும் போட்டித் தேர்விலயும் நேர்முகத் தேர்விலயும் ஆங்கிலத்திலதான் கேள்வி கேப்பாங்க. பதில தப்பு இல்லாம எழுதணும் சொல்லணும்.அதிலதான் நா பல்டி அடிக்கறனே. அதுக்குத்தான் அப்பாகிட்ட சிபாரிசு பண்ணி ஒரு நல்ல எடமாப் பாத்து ஒரு பெட்டிடிக்கடை வச்சுக் குடுக்கச் சொல்லுங்க. நா ஒரு நாளைக்கு ₹3,000/- சம்பாதிச்சுத் தர்றேன்.
@@@@@
நீ புத்தியுள்ளடா வடிவு. நீ பொழச்சுக்குவே. உங்கப்பன் வரட்டும். நாஞ் சொன்னா அவன் எதையும் தட்டமாட்டான்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

எழுதியவர் : மலர் (19-Nov-16, 8:20 pm)
பார்வை : 238

மேலே