நான் மட்டும் மோடியாக இருந்திருந்தால்

நவம்பர் 8-ஆம் தேதி பிரஸ் மீட்ல இதை சொல்லியிருக்க மாட்டேன்:

" கள்ள நோட்டும் கருப்புப்பணமும் தடுக்க நாங்க புதிய கொள்கையை எடுத்திருக்கிறோம். அதை இப்போ நான் அறிவிக்கிறேன்:

இனி 500 ரூபாய் 1000 ரூபாய் கரன்சி செல்லாது. எல்லாரும் டிசம்பர் வரைக்கும் அவங்கவங்க கரன்சிகளை பேங்கில கொடுத்து புது கரன்சிகளை மாத்திக்கலாம்."

இந்த செல்லாதுங்குற வார்த்தையும் இனி என்கிற வார்த்தையும் திடீர்னு இந்தியாவையே ஸ்தம்பிக்க வைத்தது.

நேபாளம், பாகிஸ்தான், வங்க தேசம் - இங்கிருந்த வந்த கள்ள நோட்டுகளை தடுக்க இது தான் வழி அப்படின்னு அவர் நினைச்சாரு.

அரசியல் வாதிங்க பதுக்கி வச்சிருக்கிற கள்ளப்பணம், அப்பிடி இப்படின்னு எல்லாம் லஞ்சமா வாங்கி சேத்து வச்ச பணம் - இதுக்கெல்லாம் முடிவு கட்ட அவருக்கு இந்த மாதிரி அதிரடி ஆக்சன் தேவப்பட்டுச்சு.

ஆனா, பாவம் அவர் நினைச்ச மாதிரி கள்ள நாட்டுக்கு தடை போட முடிஞ்சாலும் கறுப்புப்பணத்துக்கு ஒண்ணுமே நடக்கல. எல்லாரும் வச்சிருந்த வெள்ளைப்பணத்துக்குத்தான் ஆப்பு வந்து சேர்ந்தது.

திடீர்னு மக்கள் கையில வச்சிருந்த எல்லாப்பணமும் செல்லாதது ஆன மாதிரி ஒரே களேபரம் ஆயிடுச்சு.

எல்லாரும் பேங்க்குக்கு படையெடுக்க ஆரம்பிக்க நாடே அல்லோகலப்பட்டது.

இப்ப இத்தனை நாளாகியும் எதுவுவே சரியாகாம பிஸினஸும் எல்லா இடத்துலயும் முடங்கிப்போச்சு.

புழக்கத்தில் இருந்த 50 ரூபா 100 ரூபா கிடைச்சவங்க கைய விட்டு வெளியில வராம எல்லாரும் 2000 ரூபாவ திரும்ப திரும்ப கையில வச்சுக்கிட்டு அதுவும் செல்லாது-ங்கிற மாதிரி நினைச்சுக்கிட்டு அதை சில்லறை மாத்திக்கணும்-னு மக்கள் எல்லாப்பக்கத்திலயும் அலைய ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நஞ்ச 50,100-களும் அங்க அங்க முடங்க ஆரம்பிச்சுடுச்சு.

இப்ப என்ன நிலைமைன்னா எல்லா பேங்கிலேயும் பழைய செல்லாத நோட்டு மட்டும் இருக்கு, எல்லா பேங்க்கிலேயும் 50 ரூபாயோ 100 ரூபாயோ மொத்தமா இருந்த 14 சதவிகிதம் படிப்படியா குறைஞ்சு போக ஒன்னு ரெண்டு சதவிகிதமா ஆயிடுச்சு. இதைத்தவிர எங்க பாத்தாலும் 2000 ரூபா நோட்டு தான்.

தேவையான அளவு புது கரன்சிகளை (500 ரூபா, 100 ரூபா) அச்சடிச்சு நாடு பூராவும் சர்க்குலேஷன்ல விட ஆறு மாசத்துக்கு மேல ஆகும்கிற நிலைமை எல்லாரையும் பதட்டமான சூழ்நிலைக்கு கொண்டு போக சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்ட்டை கேள்வி கேட்டு துளைக்க ஆரம்பிக்க கவர்ன்மெண்ட்டுல என்ன பண்ணலாம்னு யோசிச்சு யோசிச்சு இந்தா 500 ரூபா நோட்டு வருது இங்க வரலைன்னா அதுக்கு இது தான் காரணம் இனிமே வந்துரும் கைவசம் தேவையான அளவு இருக்கு யாரும் கவலைப்பட வேண்டாம்னு அறிவிப்பு தினம் தினம் இந்த வாரம் பூராவும் வர ஆரம்பிச்சுடுச்சு.

இன்னைக்கு என்ன நியூஸ் தெரியுமா?

விமானத்துல எல்லாப்பக்கமும் 500 ரூபா கரன்சிகளை நாளையிலயிருந்து அனுப்பி வைக்கப்போறோம்-னு.

இங்க கரன்சி பற்றாக்குறை தானே பிரச்சனை.
லாஜிஸ்டிக்ஸ் இல்லையே.

எல்லாருமே குழம்பிப்போய் மக்களையும் குழப்பி தினம் தினம்
க்யூ-வில அலைய விட்டு அவனவன்கிட்ட வாங்கிக்கட்டிக்கிட்டது தான் மிச்சம்.

இது இப்படி ஆகியிருக்க கூடாது.
என்ன பண்ணியிருக்கலாம்?

மேல்தட்டு மக்கள், பணக்காரர்கள், வியாபாரம் செய்யாதவர்களுக்கென ஒரு நடைமுறை:

ரொக்கம், அசையும் அசையா சொத்து, வங்கியில் இருக்கும் டெபாசிட் இவர்களுக்கான வருமானத்திற்கான கணக்குகளை ஆன்லைனில் டிசம்பருக்குள் ஒப்படைத்து எதிர்வரும் டிசம்பருக்குள் அவைகளை வரிமுறைக்குள் கொண்டு வந்து அதிகபட்சமாக 25 சதவிகிதத்திற்குள் வரி வசூல் செய்து விட்டு அவர்களின் தேவைக்கதிகமாக உள்ள ரொக்கப்பணத்தில் பாதியை அவரவர்களின் சம்மதத்துடன் கோல்ட் பாண்ட்ஸ் 5 வருடங்களுக்கு மாற்றி விட வேண்டும்.


நடுத்தர சாமான்ய மக்களுக்கு ஒரு வரையறை:

1. எல்லா சேவிங்ஸ் பேங்க் கணக்கு வச்சிருக்கிறவங்களுக்கு மார்ச் மாசத்துக்குள்ள ஆதார் கார்டு அடிப்படையில பேன் கார்டு இல்லாதவர்களுக்கு புது டெபிட் கார்டு வழங்கி,

2. ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த டெபிட் கார்டு போய் சேர்ந்து விட்டது என்பதை உறுதி செய்த பின் கரன்சி புழக்கத்தை முற்றிலும்
தடை செய்து விடுவது.

3. எல்லா மக்களும் ஆன்லைன்ல தான் ட்ரான்சாக்ஸன் பண்ணனும்னு
புது சட்டம்.

4. அது வரை அவங்ககிட்ட இருக்கிற கரன்சிகள் எல்லாவற்றையும் அவர்கள் அவர்களுடைய சேவிங்ஸ் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

5. ஒவ்வொருவரின் சராசரி வருமானம் (ரேஷன் கார்டில் அல்லது பேன் கார்டு எடுக்கும்பொழுது தெரிவித்திருந்த அளவுகோலை வைத்து அதற்கு மேல் இருந்தால் விகிதாச்சார அடிப்படையில் பத்து லட்சம் வரை 30 சதவிகிதமும் அதற்கு மேல் இருந்தால் 50 சதவிகிதமும் எல்லோர் கணக்கிலிருந்து வருமான வரி டெபாசிட் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படும், ஆட்டோமேட்டிக் டெபிட் முறையில். இந்த டெபாசிட்-களை ரிலீஸ் செய்யவேண்டுமானால் பணம் எங்கிருந்து வந்தது என்று 3 வருடங்களுக்குள் வருமான வரித்துறைக்கு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த வரி போக மீதமுள்ள பணம் மட்டுமே அவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.

இப்படிசெய்யும்பொழுது சாமானியர்களுக்கு சிரமம் இருக்காது.
கணக்குகள் ஒழுங்கான பின் அவரவர் சேமிப்புகளை சீரமைப்புக்குள் ஆளாக்கிக்கொண்டு கருப்புப்பண மீட்புக்கு ஒவ்வொருவரும் இணங்கும் முறையில் ஆட்பட ஒரு சிஸ்டம் உருவாகியிருக்கும்.

இது தவிர வியாபார மக்களுக்கும் சம்பளதாரர்களுக்கும் தனித்தனி நடைமுறைகள் அறிவிக்கப்படும்.

பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்படும்.
வேலைவாய்ப்புக்களை பெருக்குவதற்கும் புதிய திட்டம் அறிவிக்கப்படும்.

இது தான் எனது ஐடியா, எப்படியிருக்கு?

(என்னுடைய சுய உரிமைக்கான பதிவு. இதை பகிர்பவர்கள் என்னுடைய பெயரில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்)

எழுதியவர் : செல்வமணி (19-Nov-16, 9:13 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 420

மேலே