காதல்
விலகவும் விரும்பவும்
வினா மனதில் எழும் நொடி போதும்
எது சரி எது தவறென
தீர்மானிப்பதில்தான் வாழ்க்கை மாறும்
மௌனமாய் தொலைத்த நொடிகளை
திருப்பி கொடு என் காதலை மறுப்பதென்றால்
சென்றால் திரும்பாததாம் காலம்
இப்போது சேர்த்துக்கொள்வோமா அதில் காதலையும்