நிஜமே!....

மெர்க்குரி வெளிச்சத்தில்
மெல்லமாய்....அவளுடன்,
கடற்கரையில் கைகோர்த்தபடி
கலவைகளாய் பேச்சோடு,
மூச்சுமுட்ட முகங்கள் பார்த்தபடி
யுகங்கள் கடப்பதும் தெரியாமல்
எங்கெங்கோ பறந்தோம்,
எல்லாமே மறந்தோம்,
இவையாவும் -என்
கனவில்.....


எழுதியவர் : கு.காமராஜ். (4-Jul-11, 4:09 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 371

மேலே