முகமூடி

நான் யார்
என என்னிடம்
நானே கேட்டேன்
என் ரகசிய
நாட்குறிப்பு
என் மனப்பதிவு தானே?
இப்படி ஒரு கேள்வியை
எதிரபார்க்கவில்லை
போலும்
திரு திருவென
விழித்தது
எதை உறைப்பது
என்ற தயக்கம் கூட
காரணமாய்
இருக்கலாம்
மகன் ,சகோதரன் ,
மாணவன் ,நண்பன்,
வேலைக்காரன் ,
காதலன்,கணவன்..,
இவையாவும் நான் ஏற்க்கும்
பாத்திரங்கள் அதற்கு
கீழேவரும்
குணாதிசையங்களும்
அதன் கூட்டு அல்லவா?
அதன் பின் வரிசையில்
அனபுவேண்டுபவனாக ,
அரவனைப்பவனாக,
அன்புகாட்டுபவனாக ,
அடிபனிபவனாக ,
இசைந்துகொடுப்பவனாக,
கோபக்காரனாக,
சுயநலவாதியாக,
உதவுபவனாக
உண்மையானவனாக,
பொய்யனாக..,
இப்படி பல பதிவுகள்
என் நாட்குறிப்பில்
திடீரென
நான் யார்
என கேடால்
நான்அனியும்
முகமூடிகளின்
என்னிக்கை மட்டும்
அதன் பதிவில்
எதை அணிய
நினைக்கின்றேனோ
உடனே அதை
நொடிக்கும் குறைவான
நேரத்தில்
கணினியும் தோற்கும்
வேகத்தில் நான்
அனிய எனக்கு உதவும்
நான் யார் என
பொத்தம் பொதுவாக
கேட்டால் முழிக்காமல்
என்ன செய்யும்?#aof #சேகர்