அவளுக்கு ஒன்றும் தெரியாது

அவளுக்கு ஒன்றும் தெரியாது

பிறந்த நாள் முதல் தந்தையின்
கனிவும் கண்டிப்பும் மவுனமாக்கிய அவளுக்கு ஒன்றும் தெரியாது

உடன்பிறந்தாருக்கு உதவியும் அன்னைக்கு சமையலறையில் ஒத்துழைப்புமளித்த அவளுக்கு ஒன்றும் தெரியாது

மகனுக்கு ஒரு கரிசனையும் தனக்கு ஒரு கவனிப்புமாக கலங்கிய பொழுதிலும் அவளுக்கு ஒன்றும் தெரியாது

அண்ணனும் தம்பியும் காலாட்டி உணவருந்த அன்றும் அடுப்படியில் உழைத்த அவளுக்கு ஒன்றும் தெரியாது

புகுந்த வீட்டிலும் தொடர்ந்து பணிந்து உழைத்து களைத்த அவளுக்கு ஒன்றும் தெரியாது

அலுவலகத்துக்கு அரக்கப்பரக்க ஓடி சென்று அங்கும் உழைத்து சம்பாதித்த அவளுக்கு ஒன்றும் தெரியாது

கணவன் ராஜா மாதிரியும் இவள் சேவகி மாதிரியும் பணியாற்றி சோர்ந்தாலும் அவளுக்கு ஒன்றும் தெரியாது

தன்னை ஒறுத்து சேய்க்காக மருந்து சாப்பிட்டு பாலூட்டிய அவளுக்கு ஒன்றும் தெரியாது

ஆம்.தந்தை முதல் மகன் வரை எல்லோரும் சொல்கிறார்கள் அவளுக்கு ஒன்றும் தெரியாது

என்று அவளையும் ஒரு பொருட்டாக மதிப்பளிப்போம் ?

என்று அவள் நலம் நாடுவோம் ?

அன்னையை,சகோதரியை,மனைவியை,மகளை, உறவுகளை நேசிப்போம்.

எழுதியவர் : (23-Nov-16, 6:47 pm)
சேர்த்தது : Casimier Caroline
பார்வை : 67

மேலே