என் அழுகை
அழுகை
வெறும் அழுகையல்ல!!
அழுகை
என் குருதியின்
வெள்ளை நிற வடிவம்!!
என் வலிகளின் பரிணாமம்!!
என் உச்சக்கட்ட
துயரத்தின் சிதறல் !!
கண்ணீர் துளிகளின் எண்ணிக்கை
என் காயங்களின் எண்ணிக்கை !!
அழுகை
என் கோபத்தின் வெளியேற்றம் !!
நிதானத்திற்கு
நான் விடும் தூது !!
எனக்கு நானே
சொல்லும் ஆறுதல் !!
சந்தோஷத்தின் சிகரத்தை
எட்டிப்பார்க்க
உரிமையிருக்கும் எனக்கு
சோகத்தின் பள்ளத்தாக்கில்
படுத்துப் பார்க்கவும்
உரிமையிருக்கிறது !!
நான் ஆண்
என்ற ஒரே காரணத்தால்
அதுவும் நிராகரிக்கப்பட்டால்
என்ன நியாயம் ??