அகம் -கார்த்திகா
![](https://eluthu.com/images/loading.gif)
கால்களைக் குறுக்கி மடக்கி
ஓரமாய் சுருண்டு கொள்கிறேன்
கொஞ்சமாய் குளிர்கிறது
இல்லையில்லை இன்னும்
வெப்பம் வேண்டுவதாய்
இருக்கிறது உடலிற்கு
வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளுக்கு
என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை
பதில் சொல்லாமலிருப்பதில்
அர்த்தம் ஏதும் இருப்பதாய்
தோன்றாமலில்லை
சூடான நீர் கன்னம் வழிகிறது
கொஞ்சம் இதம் சேர்க்கிறது
வலியோடு விரல் கோர்க்கிறது
விசும்பல்கள்
கதறி அழ துடித்திடும் மனது
அழுதால் பலவீனம் என்கிறது
நொடிகள் தொலைந்த நாட்களில்
மேலிருந்து மெல்லக் கீழிறங்கும்
இருள் கவ்விக் கொள்கிறது விழிகளை
இன்னும் கொஞ்சம் உடல் குறுக்கி
வெப்பம் சேர்க்கிறேன்
கனவுகளே இல்லாத தூக்கத்தின் முடிவில் இன்னும்
நான் நானாகவே இருக்கிறேன்..
-கார்த்திகா அ