செய்தி படிக்கும் விலங்கு

மரம் விட்டு மரம் தாவிடுவாய்...
வால் கொண்ட வானரம் நீயாகிடுவாய்...
உலகச் செய்திகள் உன்கையில் இருக்கிறது...
உனக்கோ?... அதிலிருக்கும் மொழிகள் தெரியாது......


உன்னிடமிருந்து தோன்றியவர் மனிதனென்று சொன்னார்கள்...
உனக்கோ?... அறிவு ஐந்து என்றார்கள்...
எவருக்கும் தீங்கு செய்யாதவுன் குணம்
மனிதரில் பலருக்குத் துளியும் இல்லை......


உன்னை வைத்து விளையாட்டுக் காட்டுகின்றனர்...
நீமனிதனுக்குக் காட்டும் விளையாட்டு இதுவோ?...
ஆறும் இங்கே ஐந்தாக மாறுகிறது...
ஐந்துமிங்கே ஆறாக தன்னைக் காட்டுகிறது......

எழுதியவர் : இதயம் விஜய் (25-Nov-16, 10:31 pm)
பார்வை : 79

மேலே