பனிப் பொழிவு

காலையில் என் பார்வைகளைக்
கட்டிப்போட்டும் பனிப் பொழிவே!
என் அருகே வர எண்ணாதீர்கள்!
தொலைவிலேயே இருந்துவிடுங்கள்.
நான் இரசித்துவிட்டாவது போகிறேன்.
இப்படிக்கு பகலவன்.
என்னையும் நனைத்து இன்பம்
கொடுத்த பனிப் பொழிவே
பகலவன் வரவால் ஏன் என்னை
பாதியில் விட்டுச் செல்கிறீர்?
உங்கள் வரவுகளை எண்ணி
வாடியே காத்திருக்கிறேன்.
நாளை வந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
புல்வெளி்