வெறி ஒழிக

வெறியென்னும் இருள்நிறை தீபத்தை மனதிலேற்றி,
அதை அணையாது பாதுகாக்கிறாயே,
சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடென்னும் பெயர்களாலேயே...
இவற்றால் மனிதநேயம் தோன்றி வாழுமோ என் தோழா???...

உயந்தவனென்றும், தாழ்ந்தவனென்றும் பிறப்பாலே எடுத்துரைக்கும் நீ,
செயலாலும், எண்ணத்தாலும்,
குணத்தாலும், தாழ்ந்தவனே என் தோழா.....

சுதந்திரப் பறவைகளையும்,
விலங்குகளையும் கூட்டிலிட்டாயே என் தோழா...

நிலங்களைப் பங்கிட்டு வேலிகளிட்டாயே என் தோழா...
ஆறுகளை அணைகளிட்டு தடுத்தாயே என் தோழா....
கடலையும் பிரித்தாளுகிறாயே என் தோழா...

உனது வல்லமையாலே உயிர்வதை செய்து,
அதையே வீரமென்றுரைக்கிறாயே என் தோழா...

உனது சந்தோஷத்திற்காகவே பிற உயிர்களை அடிமை கொள்ளும் உன்னை அடிமைப் படுத்தினால் மட்டும் எப்படித் துடிக்கிறாயடா என் தோழா...

மனிதப் பண்புகளாக அகிம்சை, தூய அன்பு, பாசம், கருணை, நேர்மை, உண்மையென்ற பல நற்பண்புகளிருக்கையில்,
பழிக்பழி என்னும் கோபமும், குரோதமும் உன்னுள் கொளுந்துவிட்டு எரிவதேனோ என் தோழா???...

குற்றமென்னும் பிடியில் சிக்கிச் சூளுரைத்து,
சூழ்ச்சியாலே
சுற்றமழித்து நித்தமும் நிம்மதி கொள்கிறாயோ என் தோழா???...

காலச்சாரமென்னும், பண்பாடென்னும் உயிர் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் நீ,
உண்மையில் அதை பின்பற்றுகிறாயோ என் தோழா???...

பணத்தால் உயிர்களைக் கொல்வதும், கொள்வதும் தான் உனது மனித நேயமோ என் தோழா???...

பிறக்கும் போது பகைமையோடு யாரும் பிறப்பதில்லையே என் தோழா....
வளர்ந்துச் சுற்றத்தை உனக்கு பகையாக்கியதே நீ தானே என் தோழா....

சிறந்தவனெவனென்று
அறிய விவாதங்களும்,
சண்டைகளையும் நடத்தும் நீ, என்றுமே சிறந்தவனாக இயலாதடா என் தோழா...

இத்துடன் உனது மனதிலுள்ள வெறியென்னும் இருள் நிறை தீபத்தை அணைத்து விடு என் தோழா....
இல்லையேல் அத்தீபத்திலேயே நீ அழிவாயடா என் தோழா.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Nov-16, 6:22 pm)
Tanglish : veri ozhika
பார்வை : 534

மேலே