பிராத்தனை

விலையுயர்ந்த கார் உன்னருளால் வாங்கினேன் கடவுளே ...
உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி கடவுளே ...
அடுத்து விமானம் வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

விலையுயர்ந்த BIKE உன்னருளால் வாங்கினேன் கடவுளே ...
உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி கடவுளே ...
அடுத்து கார் வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

விலையுயர்ந்த CYCLE உன்னருளால் வாங்கினேன் கடவுளே ...
உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி கடவுளே ...
அடுத்து BIKE வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

அழகான கால்களை கொடுத்ததற்கு நன்றி கடவுளே ...
ஊனம் இல்லாமல் படைத்தற்கு நன்றி கடவுளே ...
அடுத்து OLYMPIC இல் ஓடி தங்கம் வாங்க உறுதுணையாய் இரு கடவுளே ....

வாழ்க்கை கொடுத்த கடவுளே ...
இரண்டு கால்கள் கொடு கடவுளே .....
மாற்று திறனாளியான என்னை மற்ற மனிதரைப்போல் எழுந்து நடக்க உதவிடு கடவுளே .....

வாழ்க்கை பாதையில் அவரவருக்கு ஒரு பிரார்த்தனை உண்டு ......
பிராத்தனை செய்வோம் மற்றவருக்காக .....

எழுதியவர் : சாமுவேல் (27-Nov-16, 2:08 pm)
சேர்த்தது : சாமுவேல்
Tanglish : piraththanai
பார்வை : 168

மேலே