வற்றாத அன்பு
என் விழிகளோ உன்னிடம்
பல நூறு கவிதைகள் பேசிட
சிந்திக்காது நீயோ அருகில் வந்தே அணைத்தாய் என்னை....!
கரம் பிடித்த நாள் முதலாய்
கரைந்து வழியவில்லை என் கண்ணீர்
ஒவ்வொரு நொடியும் நீ தரும் அன்பு காலத்தால் அழியாது காவியமாகிறது!
கடிகாரத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது முட்கள்...
இதயத்தில் நகராமல் நிலைக்கின்றது உன் அன்பு...!
தூக்கமின்றித் தொட்டுப் போகும் தென்றல் போல நீயும்....
துள்ளியோடித் திரிகின்றாய் தினமும்
என் மனத்திரையினிலே...!
தாய் அன்புக்காய் தவித்த எனக்கு
அன்னைக்கு நிகராய்....
வாரி வழங்குகிறாய் குறைவில்லாது நிறைந்த அன்பை....!
தாயின் மார்பில் வற்றாது சுரக்கும்
தாய்ப்பால் போல....
என் ஆயுள் முடியும் வரை கிடைத்திட வேண்டுமடா...
என்றும் உன் வற்றாத அன்பு.!!!