நிழல் தேடும் மரம்
மத்தியகிழக்கு தேசம் ஒன்றில் பேணா தன் மை காயமுன் எழுதியது
பாலைவன பெருவெளியில் பெற்றோல் இருக்கிது இங்க
பெற்றோரும், கொண்டவளும் இல்ல இங்க
மாசம் முடிய கைநிறைய சம்பளம் இருக்கிது இங்க
மனம் நிறைய சந்தோசம் இல்ல இங்க
காசு கொடுத்தா ருசியா பிரியாணி இருக்கிது இங்க
விக்கல் வந்தா தலையை தட்ட கைதான் இல்ல இங்க
தொலைத்தொடர்பு சாதனம் தான் துணைக்கு இருக்கிது இங்க
தொலைந்து போன காலத்தை மீட்டிதர டைம் மெசின் இல்ல இங்க
நான் அனுப்பும் காசுக்கெல்லாம் கணக்கு இருக்கிது இங்க
என்ன கணக்கு பண்ண யாரும் இல்ல இங்க
பணம் தர ATM நிறைய இருக்கிது இங்க
இந்த மரத்துக்கு தான் இதுவரை நிழல் இல்ல இங்க