தனலட்சுமி ஆகிய உன்னை

தனத்திற்கு ஒரு கால் கொடுத்து
தானத்திற்கு வழி வகுப்பவள் !
வனத்திற்கு மற்றொரு கால் கொடுத்து
வானத்திற்கு அடியெடுத்து வைப்பவள்!

உன் முகத்திரையை இதுவரை நான் பார்த்திராதபோதிலும் ,
என்னுடைய முன்னுரை உன் பெயரை
அழகாக உவமிக்கிறதல்லவா ? உவமிக்கட்டும் !

பெண்கள் மேலே மையல் உண்டு என்ற
திரைப்படப் பாடல் வரி போல
உன் பெயரின் மீது மையல் கொண்ட
காதலன் நான் !

காதலனா ! என்று உன் புருவத்தை உயர்த்தாதே ,
பின் உயர்த்திய புருவ வளையத்தின் அழகை
கண்ணாடியும் பறைசாற்ற அழகு இரட்டிப்பாகிவிடும் ! ஆமாம் .

உன் கண்கள் வழியாக எனது வரிகளை படித்துப்பார் ,
படித்து மட்டும் பார்,
இல்லையேல் அது உனக்கு பிடித்தும் போய்விடும் !
பின் பிடித்து போய்விட்ட வரிகள் அனைத்தும்
ஒன்றுக்கொன்று சண்டையிடவும்செய்யும்.

சண்டையா ?என்று உன் கண்களை பிதற்றாதே !
உன் கண்பட்ட எனது வரிகள் கூட வஞ்சகத்தை கைவிடுத்து
மௌன விரதத்தை கடைபிடிக்கும் .
அப்படித்தானே !

உன் இதழின் புன்சிரிப்பு
இப்போது எனக்கு கேட்கிறது ,
ஐயோ ! அது புன்சிரிப்பா
அல்லது புண்பட்ட சிரிப்பா ?

எனது எழுத்துக்கள் ஏதேனும்
உன் மனதை புண்படுத்தியனவா ?
இருக்காது ,ஏனேனில் அதற்கு
உன் புன்சிரிப்பு மட்டும் போதாதம் ,
அதற்கும் மேலாக ,வாய்விட்ட சிரிப்பையும் கேட்கிறதாம் !
கேட்டால் குறையேதும் இல்லையே ? இல்லைதானே!

முன்னுரையும் , இடையுரையும்
போட்டி போட்டுக்கொண்டு
உன்னை போற்றியது போதாதென
முடிவுரையும் இப்போது மல்லுக்கட்டுகிறதே !!

முடிவுரையா ? அழகை வர்ணிக்க முடிவுரையா ?
சங்க இலக்கியங்களிலும் அழகையும் காதலையும்
வர்ணிக்க முடிவுரை இல்லையே !!

உன் அகத்தின் அழகை அகநானூறும் போற்றும்,
உன் முகத்தின் அழகை புறநானூறும் பாடும்!
தனலட்சுமி ஆகிய உன்னை ,
உவமைப்படுத்துவதா ? உருவகப்படுத்துவதா ?
அல்லது ..................!!!
கோடிட்ட இடத்தை நிரப்பிக்கொள் ….
சே.மதியழகன்

எழுதியவர் : (27-Nov-16, 3:30 pm)
சேர்த்தது : மதியழகன்
பார்வை : 110

மேலே