குழந்தை மனசு

முல்லைச் சிரிக்கும் பிள்ளை முகம்...
கள்ளம் இல்லாத வெள்ளை மனம்...
பனியாய் மறையும் உள்ளத்தின் சினம்...
கனிந்த அமுதாய் இனித்திடும் குரல்......


பத்து நிமிடம் அவளிடம் பேசினால்
பறந்து போகும் பலரது அகந்தை...
புன்னகைச் செய்யும் இதழ்கள் இரண்டில்
கொட்டிக் கிடக்குது ஆயிரம் கவிதைகள்......


பிஞ்சு விரல்கள் நெஞ்சைத் தீண்ட
கொஞ்சும் மலர்கள் மென்மை தோற்கும்...
அங்கம் முழுதும் நிலவு ஒளிரும்
தங்கம் வந்து கடனும் கேட்கும்......


ஆறு வயது அடைந்து விட்டாள்...
நூறு மனங்களைக் கவர்ந்து விட்டாள்...
செல்லமாய் வளர்ந்தாள் அவளுடன் இருப்பதால்
நானும் ஆகிவிட்டேன் சிறு குழந்தையாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Nov-16, 10:00 am)
Tanglish : kuzhanthai manasu
பார்வை : 2667

மேலே