அத்தமவளே
அத்தமவளே அடியே என்ஆச இரதியே...
கொத்தமல்லி கொடியே ஏழுசுரங்களின் சுதியே...
நெஞ்சத்தான் கசக்கிப்புட்டே பஞ்சாகப் பறக்கவிட்டே...
இராத்தியில் தூங்காம நாளெல்லாம் வாடுறேனே......
ரெக்கை இல்லாம வானத்துல பறக்குறேன்...
வெட்கத்தில் முகம் பூவாய் சிரிக்கிறேன்...
மாம்பழ நெறத்தழகி மல்லிப்பூ பல்லழகி
ஒன்ன காணாம கண்ணுமுழி ஏங்குறேன்......
ஒத்தையடி பாதையெல்லாம் நம்கதைச் சொல்லுதடி...
எழுதாத வேதமாக ஏடுகளும் நிறையுதடி...
தண்ணியில கரைகிற உப்பைப் போல
ஒன்னால என் மனசு கரையுதடி......
மஞ்ச தேச்ச சித்திரை நெலவே...
கொஞ்சி பேச வெரசா வந்திடு...
வஞ்சி நீயும் வாராத பொழுதுகள்
நெஞ்சாங்குழி நெருப்புக் குழியாய் ஆகுதடி.......
மாமன் மனசுக்குள்ளே ஊஞ்சல் ஆடுகிற
மலை தேசத்து மாதுளம் கனியே...
சிற்பமாய் என்னை செதுக்கும் உளியே...
என் உசுரே நீதான் கிளியே......