கறுப்பு பணத்தை ஒழிக்க ------

மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல வருமான வரித்துறை அதிகாரிகளும் தூக்கத்தை இழந்துள்ளனர்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்..மோடி அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து வருமான வரித்துறையினரின் வேலைப்பளு அதிகரித்துள்ளது. போதிய ஆட்கள் இல்லாததால் விடுப்பில் சென்ற அதிகாரிகள் கூட வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்
ரெய்டுகள் நடத்த, கண்காணிக்க போதிய ஆட்கள் இல்லாததால் வருமான வரித்துறை பிற துறைகளில் இருந்து ஆட்களை அழைத்து வேலை வாங்கி வருகிறது
--------------------------
கணக்கில் காட்டாமல் பணத்தை கத்தை கத்தையாக பதுக்கி வைத்திருப்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகின்றனர். பலர் தங்களது ஊழியர்கள் மூலம் பணத்தை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் வட்டி தொழில் செய்யும் செய்வோர் அவர்களது வங்கி கணக்கில் டெபாசிடே செய்வது கிடையாது. கத்தை கத்தையாக பணத்தை கையில் வைத்து கொண்டு வட்டிக்கு விடுவார்கள்.
தற்போது இவர்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மொத்தமாக மாற்ற முடியாமல் தவித்து வருகி்ன்றனர். வட்டிக்கு பணம் கேட்டு அழைத்தவர்களை தேடி பிடித்து வீட்டுக்கே வந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கொடுத்து வருகின்றனர். இதற்கு வட்டி வேண்டாம் என்று கூறி வருவதாக கூறப்படுகிறது. பணம் தேவையில்லை என்று கூறுபவர்களிடம் கட்டாயப்படுத்தி கொடுத்து வருகின்றனர். இந்த செயல்களால் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களின் மூலம் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு, 50 சதவீதம் வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தெரிகிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் முக்கிய நடவடிக்கையாக கடந்த 8-ஆம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ள பணம் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் காலஅவகாசம் இருப்பதால் வங்கிகளின் டெபாசிட் தொகை மேலும் சில லட்சம் கோடிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எழுதியவர் : (28-Nov-16, 12:32 pm)
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே