காதலைலே தேடி-32

காதலை(லே) தேடி-32
உன் முறைப்பிலும்
நீ போடும் செல்ல சண்டையிலும்
உன் காதலை தவிர
வேறெதுவும் நான் உணர்ந்ததில்லை
என் காதல் சகியே!!!


"இவ்ளோ மெதுவா போனா கல்யாணத்துக்கு இல்ல பொண்ணு பையனோட வாரிசுக்கு காதுகுத்தற விழாவுக்கு தான் போகணும், என்னடா சாரதி ஆச்சு உனக்கு, கொஞ்சம் வேகமா தான் போயேன்...."

"அட என்னம்மா நீங்க, வேகமா போனா கல்யாணத்துக்கு போற வழியில மோட்சத்துக்கு அனுப்ப வழிபண்ணிடாதேன்னு புலம்பறிங்க, மெதுவா போனா ஊர்வலமா போகறோமான்னு நக்கல் பண்றிங்க, இப்ப என்ன தான்மா நான் பண்ணட்டும்"

"ஆமாடா நான் என்ன சொன்னாலும் உனக்கு குத்தமா தான் இருக்கும், உன் பொண்டாட்டி சொன்னா தான் இனிக்கும், இனி எது சொல்றதா இருந்தாலும் அவளையே சொல்ல சொல்றேன்"

"ஐயோ அம்மா, ப்ளீஸ் ஆரம்பிச்சிடாதீங்க, எத பத்தி பேசினா நீங்க எத கோர்த்துட்டு இருக்கீங்க, இப்போ நாம கல்யாணத்துக்கு போறோம், இப்போ எந்த வாக்குவாதமும் வேண்டாம், நான் வேகமா வண்டிய ஓட்றேன், பத்திரமா உங்களை கூட்டிட்டு போய் விடறேன், நீங்க நிம்மதியா வாங்க"

பாத்திங்களா, இதுக்கு தான் நான் சொன்னேன், இந்த லட்சணத்துல ஒரே கலர் டிரஸ் போடலைனு தான் குறைச்சல்....விழிகளில் குளம் கட்ட அபிநயத்தோடு சகி அவளின் மனதை மௌனமாக எனக்கு உணர்த்தினாள்....

என்ன நடந்தாலும் உனக்கு நான் இருக்கேன், கலங்காதே என் கண்மணி என்று கண்களாலே சைகை காட்டி விட்டு வண்டியின் வேகத்தை கூட்டினேன்...

"சகி இந்த ஜூஸ் பாட்டில் ஓபன் பண்ணி தா"

"ம்ம்ம்"

"இந்தாங்க, ஓபன் பண்ணியாச்சு"

"ஹேய்ய், ஷெட், இப்படி ட்ரெஸ் எல்லாம் கொட்டிடுச்சே, பாத்து குடுக்க மாட்டியா சகி..."

"கார் ஸ்லோவ் பண்ணிருக்கலாம்ல, இப்போ ட்ரெஸ்ல ஜூஸ் கொட்டிடுச்சு, இப்படியே எப்படி அங்க வருவீங்க" தவறு செய்த சிறுபிள்ளையை போல் பரிதாப தொனியில் சகி வருத்தப்பட...

"சரி பரவால்ல விடும்மா, மண்டபத்துக்கு பக்கத்துல வந்தாச்சு, அங்க போய் வாஷ் பண்ணிக்கலாம்" அம்மா சகியை திட்ட வாயெடுக்கும் முன் அப்பா நிலைமையை சகஜமாக்க முயற்சி செய்தது புரிந்து கொண்டு அதற்க்கு மேல் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை....

"அப்பா, நீங்க அம்மாவோட பர்ஸ்ட் போங்க, நான் டிரஸ் வாஷ் பண்ணிட்டு சகிய கூட்டிட்டு பின்னாடியே வந்துடறேன்...

"சரிப்பா, சீக்கிரம் வந்துடுங்க"

கார் மண்டபத்தின் வாசலில் நிற்க அம்மாவும் அப்பாவும் மண்டபத்திற்குள் நுழையும் வரை காத்திருந்துவிட்டு என் திட்டத்தை ஆரம்பித்தேன்...

"சகி நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன், நீ வாசலிலேயே நில்லு, நான் வந்தப்புறம் ஒண்ணா போகலாம்"

"சரிங்க,சீக்கிரம் வாங்க, நான் வெயிட் பண்றேன், அப்புறம் ஒரு விஷயம் தோத்துட்டேன்னு நினைச்சி எஸ்கேப்லாம் ஆகிட கூடாது, ஓகே" என்னை சீண்டியபடி புன்னகையோடு போனவளை பார்த்து உள்ளுக்குள் சிரிப்பு வந்தது....

"ஹலோ, என்னங்க பண்றிங்க....நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது, இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க, கார் பார்க் பண்ணிட்டிங்களா இல்லையா?" என்று அலைபேசியில் என்னை அழைத்தவளிடம் "டார்லிங், என் காதல் கண்ணம்மா...நான் உன் பின்னாடியே தான் நிக்கறேன், போகலாமா?" என்றதும் "என்ன பின்னடியா???" என்று அதிர்ச்சியில் திரும்பினாள்....

"என்ன, என்ன இது, எப்படி??" அதிர்ச்சியில் விழி விரித்து நின்றவளின் கன்னத்தில் தட்டி "உள்ள போகாம இப்படியே நின்னு பேசிட்டு இருந்தா கல்யாணமே முடிஞ்சிரும், முதல்ல உள்ள போகலாம் வா" என்று அவளின் ஆச்சரியத்தை சட்டை செய்யாமல் அவள் கை கோர்த்தபடி அழைத்து சென்றேன்..

கல்யாணம் முடியும் வரை என் சகியை எதுவும் பேசவிடவில்லை, "சகி அப்புறம் பேசிக்கலாம், இப்போ கல்யாணத்த பாரு"

"எப்படி இது, நீங்க எதோ கோல்மால் பண்ணிட்டீங்க, என்னனு சொல்லுங்க, ப்ளீஸ்"

"இப்போ எதும் சொல்ல மாட்டேன், வீட்டுக்கு போய்ட்டு சொல்றேன்"

என் பின்னாடியே சுத்தி கொண்டிருந்தவளை கண்டு கொள்ளாமல் ஹீரோயிசம் காட்டிக்கொண்டு சுற்றி கொண்டிருந்தது வானத்தில் பறப்பதை போல இருந்தது...

"இப்போ சொல்ல போறிங்களா இல்லையா, நீங்க சொன்ன மாதிரி வீட்டுக்கு வந்தாச்சு, இப்பவே சொல்லுங்க"

"இரு சகி, நான் போய் பிரெஷ்அப் ஆகிட்டு வந்துடறேன்"

"அதெல்லாம் முடியாது, எனக்கு இப்பவே சொல்லுங்க"

சிறுபிள்ளையை போல என் முன்னாள் பிடிவாதம் பிடித்து கொண்டு நின்றுகொண்டிருந்தவளை இறுக அணைத்து என் அணைப்பினால் சிவந்த கன்னங்களில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தேன்...

"கார்ல பச்சை கலர்ல டிரஸ் வச்சிருந்தேன்"

என் பதிலை கேட்டு இவ்ளோ தான என்று அலட்சியம் காட்டியவள் திடீரென எதோ தோன்றியதை போல எனக்கு இன்னொரு டவுட் என்று அடுத்ததாக ஆரம்பித்தாள்...

"என்ன டவுட்"

"நான் என்ன கலர்ல டிரஸ் போட போறேன்னு உங்களுக்கே தெரியாதே, அப்புறம் எப்படி நீங்க பச்சை கலர் எடுத்து வச்சிருப்பீங்க?"

"எனக்கு தெரியும் பச்சை கலர்னு"

"இல்ல, தெரிய வாய்ப்பே இல்ல, கடைசியா கிளம்பும்போது தான் நான் பச்சை கலர் புடவை கட்டினேன், அதுவும் பின்பக்கம் வழியா ஷாலால போத்திக்கிட்டு யாருக்கும் தெரியாம வந்து கார்ல ஏறிட்டேன், சோ உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லையே"

அவள் செய்த தகிடுதத்தம் எல்லாத்தையும் உளறிவிட்டு உதட்டை கடித்தபடி விழித்து கொண்டிருந்தாள்...

"அடி பாவி, எவ்ளோ திருட்டுத்தனம் பண்ணிருக்க, எல்லாத்தையும் பண்ணிட்டு அப்பாவி மாதிரி என்ன கேள்வி கேட்கறயா"

"அதெல்லாம் விடுங்க, இப்போ நீங்க சொல்லுங்க, எப்படி உங்களுக்கு தெரியும்"

"அது.... அது வந்து, ஆமா நான் உண்மையா சொன்ன எனக்கு நீ என்ன தருவ"

"உங்களுக்கு பிடிச்ச ஆனியன் ரெய்த்தா பண்ணி தரேன், ஓகே வா"

"அம்மாகிட்ட கேட்டாலே அம்மா பண்ணி தருவாங்க"

"சரி வேற என்ன வேணும்"

"நான் சொல்ற ஒரு விஷயத்துக்கு நீ சம்மதிக்கணும் ப்ராமிஸ் பண்ணு"

"என்ன விஷயம்"

"அத அப்புறம் சொல்றேன், நீ சத்தியம் பண்ணு"

"முதல்ல நீங்க என்னனு சொல்லுங்க"

"நாம அடுத்த வாரம் ஊட்டிக்கு ஹனிமூன் ட்ரிப் போறோம்"

"ஊட்டிக்கா!!!! ஊட்டிக்குலாம் என்னால வர முடியாது, அதுவும் ஹனிமூன் ட்ரிப், நோ சான்ஸ்... அத்தைக்கு பிடிக்காதுங்க, எதாவது சொல்லுவாங்க,இதெல்லாம் வேண்டாம்"

"சகி ப்ளீஸ், எப்போ பாரு எல்லாரும் சேர்ந்து உன்ன எதாவது சொல்லிட்டே இருக்காங்க, காரணமில்லாத ஒரு விஷயத்துக்கு நீ குற்றவாளியா நிக்கிற, எல்லாத்தையும் கையாலாகாதவனா நான் பாத்துக்கிட்டு நிக்கறேன்,எனக்கு வலிக்குது சகி, உன்ன ஒரு வாரத்துக்காவது எந்த பிரச்னையும் இல்லாம, என் பழைய சகியா சந்தோஷமா பாத்துக்கணும், ப்ளீஸ் சகி, வேண்டாம்னு சொல்லாத"
கண்கள் கலங்க குற்ற உணர்வுடன் நான் நிற்க என் வலியை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தாள்...

"ஓகே... அதான் சரினு சொல்லிட்டேன்ல,இப்படி முகத்தை சோகமா வச்சிக்காதிங்க, பாக்க சகிக்கல,இப்போ சொல்லுங்க, எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்க"

அத விட மாட்டேங்கறாயே, சொல்லி தான் ஆகணுமா, சரிமுறைக்காத சொல்றேன் , நீ என்கிட்ட கண்ணாமூச்சி ஆட்டம் காட்டினியா, கடைசி வர நீ என்ன கலர்னு என்னால கண்டுபிடிக்க முடியலையா, அதான் எல்லா கலர்லயும் ஒரு செட் டிரஸ் எடுத்து கார் டிக்கில வச்சிட்டேன், நீ பச்சை கலர் போட்டு வந்ததும் அதே கலர்ல நானும் போட்டுக்கிட்டேன்,எப்படி என் புத்திசாலித்தனம்"

"ம்ம்ம்க்க்க்கும்,அத்தைக்கு மட்டும் இது தெரிஞ்சிருந்தது, அவ்ளோ தான் பத்ரகாளி ஆகிருப்பாங்க,அப்போ தெரிஞ்சிருக்கும் உங்க புத்திசாலித்தனம்லாம்"

"அதுக்கு தான ட்ரெஸ்ல ஜூஸ் கொட்டின மாதிரி ஒரு செட் அப் பண்ணேன்"

"என்னது, என்னலாம் பிராட் பண்ணிருக்கீங்க, உங்களால அத்தைகிட்ட நான் நல்ல திட்டு வாங்கிருப்பேன், உங்களை இருங்க"

தலையணை வைத்துக்கொண்டு பொய்க்கோவதுடன் என்னை அடித்து கலைத்தவள் சிரித்துக்கொண்டே "இந்த குறும்பும், விளையாட்டும் தான் ரொம்ப பிடிச்சிருக்கு"என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் சாய்ந்தாள்....

எழுதியவர் : இந்திராணி (28-Nov-16, 3:50 pm)
பார்வை : 538

மேலே