நாதியில்லை என்ற நினைப்புத்தானே

'கல்யாண மாலை' யிலே
ஒவ்வொருவரும் கேட்கையிலே
அவரவர் சாதியிலே
வதுவும் வரனும் கேட்கையிலே

'Caste No Bar' என்போர்
கலப்புத் திருமணம் செய்தோரே!
பின் வரும் சிக்கலை சிந்தித்தால்
காதலைத்தான் நோக்காரே!

நம்ம சாதியில் ஆண்கள் கிடைப்பார்கள்,
அவன் (காதலன்) கிடைப்பானா..? என்றால்
அவனுக்கும் இவனுக்கும் இருப்பது ஒன்றுதான் - மனம்
பின் ஏன் காதலென்று அலைகிறாய்?

பெற்றோர்க்கு என்னதான் மரியாதை!
அவர்க்கு நம்மை விட்டால் நாதியில்லை
என்ற நினைப்புத்தானே! இருந்தாலும்
நீ நன்றாயிரு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-11, 10:19 am)
பார்வை : 455

மேலே