"முட்டை..."

ஓரழகான ஓவியம்
நீள்வட்டமாய் இருந்தது
அழகிய வெளிப்புறம்
இரத்த சிவப்பாகவும்
உள்ளார்ந்த உட்புறம்
வெண்மையாகவும் இருந்தது
அத்தாளில் என்பெயர்
பொறிக்கப்பட்டு இருந்தது
ஓ! நான்தான் அந்த
அற்புத ஓவியனோ
இல்லை என்றது
என் மனம்
சட்டென்று பார்த்தேன்
அதென் தேர்வுத்தாள்!!!!