வல்லரசு இந்தியா

வல்லரசு இந்தியா
மாநகரில் வாழ்கிறேன்
நாள்தோறும்
ரயில் பயணம்
நாள்தோறும் காண்க்கிறேன்
தண்டவாளத்தின் ஒரத்தில்
வரிசையில் நிற்கும்
என் மக்களை
ரயில் கடந்ததும்
மலம் கழிக்கின்றர்
என் நாட்டின்
புதிய ரூபாயில்
மங்கல்யான் படம்
பதிக்கப்பட்டுள்ளது
ஒன்றும் புரியவில்லை
உங்களுக்கு புரிகிறதா?