வான் மேகங்களே

வான் மேகங்களே வான்மழைத் தாருங்களே...
தேன் பூக்கள் நீரின்றி வாடுகின்றதே...
மின்னல் வெளிச்சத்திலே பூமியும் ஒளிர்கின்றதே...
சன்னல் கம்பிகளும் சாரலைக் கேட்கின்றதே......


காற்றில் நீயும் கலைந்திட வேண்டாமே...
சேற்றில் தாமரையும் கலங்கிட கூடுமே...
ஆற்று மணலின் தாகம் தணியட்டுமே...
நேற்றுப்போல் ஏமாற்றாது நீவர வேண்டுமே......


ஆனந்த இராகத்தில் குயில் பாடுகின்றதே......
கானகத்தில் தோகைவிரித்து மயில் ஆடுகின்றதே...
மீன்களாய் மனம் நீந்தி அலைகின்றதே...
மான்களாய் கால்களும் துள்ளித் திரிகின்றதே......


தென்றலில் தவழ்ந்து மண்வாசம் வீசுகின்றதே...
கன்னம் வருடயில் அங்கம் சிலிர்க்கின்றதே...
இமைகள் அசையாது உன்னையே பார்க்கிறேனே...
இனியும் தாமதமேன் வந்தெனை நனைத்திடுவே......


நெற்றியில் ஒற்றைத் துளி விழுகின்றதே...
நெஞ்சத்தில் அனல் தணிந்து குளிர்கின்றதே...
என்றன் மேனியை நீநனைத்திட வருவதாலே
உன்விழியின் துளிகளை ஏற்றேனே வேதமாய்......

எழுதியவர் : இதயம் விஜய் (29-Nov-16, 8:33 pm)
Tanglish : vaan megangale
பார்வை : 181

மேலே