நீ வேண்டும் வா

அன்பே நீ எங்கிருக்கிறாய்
உடனே வா
என்னுயிரே வா
அருகில் வா
அழைத்தேன் வா

உன்னை பார்த்து நாளாச்சு
உன் நினைப்பில் வானவில்
வண்ணமில்லாமல் போச்சு....

மலரும் வாசம் இல்லை
மனதில் நேசம் இல்லை

உடனே வா என்னுடன் நீ வா

மெழுகாய் கரையும் இரவு
மனதெல்லாம் உன் நினைவு....

ஒளியாய் நீயும் வா ...

பனித்துளி மலர் மேல் பேசும்
கண்ணீர் துளி என் மேல் வீசும்

குளிராய் நீ வா ...

நிலவு வானில் மறையும்
உன்னில் நானும் உறையும்
நாட்கள் வேண்டும் ...

விரைவில் வா ...

கடற்கரையில் அலையும் அடிக்கும்
அதுபோல் அன்பால் நீயும் அடிக்கும்
அன்பு சண்டைகள் வேண்டும் ...

அன்பே வா ...

கண்ணாடி பெட்டிக்குள்
துள்ளும் மீன்கள்
என் கண் பெட்டிக்குள்
துள்ளும் நீ வேண்டும் ...

கண்ணா வா ....


சுவாசப்பையில் உன் காற்று
சுத்தமாய் நீ
மொத்தமாய் என்னுடன் வேண்டும்

சுந்தரனே நீ வா ...

பூ மேல் பனித்துளியாய்
உன் தோள் மேல் உறவாடும்
பொழுதுகள் வேண்டும்...

பூவரசனே நீ வா ....

சக்கரையை கடத்தும்
எறும்பை போல
கண்களால்
என்னை கடத்தும் நீ வேண்டும்
திருடனே நீ வா ....

எழுதியவர் : கிரிஜா.தி (30-Nov-16, 8:00 pm)
Tanglish : nee vENtum vaa
பார்வை : 513

மேலே