மரணபயணம்
பயணம் என்பதே மரணவாயில் இன்று
பயமும் இல்லை பயணிக்கும் நபருக்கு !
விதியை நம்புவோரும் விதிகளை மீறி
விதியென்று கூறுவர் விபத்தும் ஆனால் !
அறிந்தே செய்கிறார் குற்றம் அவர்கள்
ஐந்தாறு நபர்கள் சேர்ந்துப் பயணம் !
அவசரமாய் சென்று ஆபத்தில் சிக்கி
அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை !
படித்தவரே ஆயினும் புரிகிறார் தவறு
பட்டங்கள் பெற்றும் சட்டம் மீறுகிறார் !
மரணத்தை நோக்கி பயணம் எனபதை
மற்றவர் கூறியும் மறுத்திடும் மனங்கள் !
இருவர் மட்டுமே பயணிக்கும் வாகனத்தில்
ஐவர் என்றால் ஐயமில்லை ஆபத்துதானே !
சாலைவழிப் பயணம் சாவிற்கு பாதையாகி
வாழ்வை சுருக்கி ஆயுளை முடிக்கின்றனர் !
பழனி குமார்

