காவியமான காதல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
93ம் படைப்பு....

பேருந்தின் ஜன்னலின்
ஓரம் ஒரு நாள்
அவளை கண்டேன்......

என் நெஞ்சின் ஓரம்
அவளுக்கு அன்றே
இடத்தை கொடுத்தேன்.....

என்னுள் காதல் வந்த விதம்
புரியவில்லை.....

அவள் முன் என் காதலை
சொல்ல வார்த்தைகள்
ஏனோ வருவதில்லை......

இதுபோல் இதுவரை
நடந்ததுமில்லை......

காதலை உன்னிடம் சொல்ல
காதல் கடிதமும்
எழுதுயதுமில்லை......

இப்போது எழுதுகிறேன்
கவிதையாக......

உன்னை வந்து
சேருவதற்கு அல்ல......

நீ தந்த காதல்
என்றும் சுகமான வலி
என்று பறைசாற்றுவதற்காக......

எழுதியவர் : பிரகாஷ்.வ. (30-Nov-16, 9:05 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kaaviyamana kaadhal
பார்வை : 287

மேலே