தோழன்
உயிர் காப்பான் தோழன்
உயிரையும் கொடுப்பான் தோழன்
தோள் கொடுப்பான் தோழன்
தோலையும் கொடுப்பான் தோழன்
ஆபத்து காலத்தில் வாள்தொடுப்பான் தோழன்
வாளா இல்லாமல்
தன்னைப்போல்
உன்னையும் நேசிப்பான்
உண்மையாய் பழகிடுவான்
உள்ளத்தில் உள்ளதையே
உதட்டில் உச்சரிப்பான்
நட்பின் இலக்கணத்தை
தவறாமல் கடைப்பிடிப்பான்
சகோதரனுக்கு சக உதிரனாக
நண்பனுக்கு நண்பனாக பழகிடுவான்...
பால் போல குணம்
கொண்டவன்
பால் நிறம் மாறாத மனம் கொண்டவன்
பரஸ்பரம் நம்பிக்கை வைத்தால்
வாழ்க்கையில் தினம்
புன்னகை பூப்பறிக்கலாம்....