நடனமாய் அரங்கேறிய காதல்

காதல் மேடைக்கு அவள் வந்தாள்
திரையும் விலகியது
அரங்கத்தில் நான் ஒருவன் தான்
அவள் என்னை நோக்கினால்
நான் அவளை நோக்கினேன்
கண்கள் இசைந்தவுடன்
கன்னி அவள்
வாய் திறந்து
காதல் மேடைக்கு
என்னை அழைத்தாள்
நானும் சென்றேன்
அங்கு அமர்ந்தேன்
செய்கையில் அவள்
என்ன பாட சொல்ல
காதல் பாடல் ஒன்று
நான் பாட அவள்
அதற்க்கு பரதம் ஆட
பாட்டிற்கு பின்னே நான்
நட்டுவாங்கம் இசைத்திட
அவள் நடனம் அதில் மிளிர
அதைத்தொடர்ந்து நான்
காதல் தில்லானா பாடி
பின்னே குறவஞ்சி பாடி
முடித்தேன்
எங்கள் காதல் நடனம்
இனிதே முடிந்திட
காதல் நாடக திரை
மூடியது
அவள் காதலும்
நடனமாய் வந்து
என் காதல் இசைக்கு
எங்கள் காதல்
அரங்கேறியது
அரங்கத்தில்
அவளும்
நானும் தான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Dec-16, 4:12 pm)
பார்வை : 73

மேலே